இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2493ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ،
شِهَابٍ أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، حَدَّثَهُ أَنَّ عَائِشَةَ قَالَتْ أَلاَ يُعْجِبُكَ أَبُو هُرَيْرَةَ جَاءَ فَجَلَسَ
إِلَى جَنْبِ حُجْرَتِي يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم يُسْمِعُنِي ذَلِكَ وَكُنْتُ أُسَبِّحُ فَقَامَ
قَبْلَ أَنْ أَقْضِيَ سُبْحَتِي وَلَوْ أَدْرَكْتُهُ لَرَدَدْتُ عَلَيْهِ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ
يَكُنْ يَسْرُدُ الْحَدِيثَ كَسَرْدِكُمْ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அபூ ஹுரைரா (ரழி) அவர்களைக் கண்டு உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படவில்லையா? அவர்கள் (ஒரு நாள்) வந்து, என் அறையின் ஒரு ஓரத்தில் அமர்ந்து, (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸை) அறிவிக்கத் தொடங்கினார்கள். நான் தொடர்ந்து அல்லாஹ்வைப் புகழ்ந்து (சுப்ஹானல்லாஹ் என்று) ஓதிக்கொண்டிருந்தபோது, அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். நான் சுப்ஹானல்லாஹ் ஓதி முடிப்பதற்கு முன்பே அவர்கள் எழுந்துவிட்டார்கள். நான் அவர்களைச் சந்தித்திருந்தால், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் பேசுவது போல் இவ்வளவு வேகமாகப் பேசமாட்டார்கள்" என்று நான் அவர்களைக் கடுமையாக எச்சரித்திருப்பேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3655சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، حَدَّثَهُ أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ أَلاَ يُعْجِبُكَ أَبُو هُرَيْرَةَ جَاءَ فَجَلَسَ إِلَى جَانِبِ حُجْرَتِي يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُسْمِعُنِي ذَلِكَ وَكُنْتُ أُسَبِّحُ فَقَامَ قَبْلَ أَنْ أَقْضِيَ سُبْحَتِي وَلَوْ أَدْرَكْتُهُ لَرَدَدْتُ عَلَيْهِ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَكُنْ يَسْرُدُ الْحَدِيثَ مِثْلَ سَرْدِكُمْ ‏.‏
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அபூஹுரைரா (ரழி) அவர்களைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படவில்லையா? அவர் வந்து என்னுடைய அறைக்கு அருகில் அமர்ந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை எனக்கு கேட்கும்படியாக அறிவிக்கத் தொடங்கினார்கள். நான் உபரியான (நஃபில்) தொழுகையை தொழுது கொண்டிருந்தேன். நான் என் தொழுகையை முடிப்பதற்குள் அவர் எழுந்து (சென்று) விட்டார்கள். நான் அவரைப் பார்த்திருந்தால், அவருக்கு நான் பதில் கூறியிருப்பேன். நீங்கள் அவசரமாக அறிவிப்பதைப் போல், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஹதீஸ்களை அவசரமாக அறிவிக்கவில்லை.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)