حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَعَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمُخَنَّثِينَ مِنَ الرِّجَالِ، وَالْمُتَرَجِّلاَتِ مِنَ النِّسَاءِ وَقَالَ أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ . قَالَ فَأَخْرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فُلاَنًا، وَأَخْرَجَ عُمَرُ فُلاَنًا.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், ஆண்களிலிருந்து பெண்களைப் போல (தோற்றம், நடை, பேச்சு, உடை போன்ற அம்சங்களில்) நடந்துகொள்ளும் ஆண்களையும், பெண்களிலிருந்து ஆண்களைப் போல (தோற்றம், நடை, பேச்சு, உடை போன்ற அம்சங்களில்) நடந்துகொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும் அவர்கள், "அவர்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்" என்று கூறினார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள்; உமர் (ரழி) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள்.
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَعَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمُخَنَّثِينَ مِنَ الرِّجَالِ، وَالْمُتَرَجِّلاَتِ مِنَ النِّسَاءِ، وَقَالَ أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ . وَأَخْرَجَ فُلاَنًا، وَأَخْرَجَ عُمَرُ فُلاَنًا.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், ஆண்களில் பெண்களைப் போன்று (வேண்டுமென்றே) நடந்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போன்று (வேண்டுமென்றே) நடந்துகொள்பவர்களையும் சபித்தார்கள். மேலும் அவர்கள், "அவர்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்" என்றும் கூறினார்கள். (நபி (ஸல்) அவர்கள்) இன்னாரை வெளியேற்றினார்கள், மேலும் உமர் (ரழி) அவர்களும் இன்னாரை வெளியேற்றினார்கள்.