இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யார் ஒரு நேர்ச்சையைச் செய்து, அதை குறிப்பாகக் குறிப்பிடவில்லையோ, (அத்தகைய நேர்ச்சைக்கான) பரிகாரம், சத்தியத்தை முறித்ததற்கான பரிகாரமாகும். யார் ஒரு நேர்ச்சையைச் செய்து, அதை நிறைவேற்ற சக்தி பெறவில்லையோ, அதற்கான பரிகாரம், சத்தியத்தை முறித்ததற்கான பரிகாரமாகும். யார் ஒரு நேர்ச்சையைச் செய்து, அதை நிறைவேற்ற சக்தி பெற்றிருக்கிறாரோ, அவர் அதை நிறைவேற்றட்டும்."