وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - وَهُوَ ابْنُ جَعْفَرٍ - عَنْ عَمْرٍو، - وَهُوَ ابْنُ أَبِي عَمْرٍو - عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَدْرَكَ شَيْخًا يَمْشِي بَيْنَ ابْنَيْهِ يَتَوَكَّأُ عَلَيْهِمَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَا شَأْنُ هَذَا " . قَالَ ابْنَاهُ يَا رَسُولَ اللَّهِ كَانَ عَلَيْهِ نَذْرٌ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " ارْكَبْ أَيُّهَا الشَّيْخُ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنْكَ وَعَنْ نَذْرِكَ " . وَاللَّفْظُ لِقُتَيْبَةَ وَابْنِ حُجْرٍ .
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள், ஒரு முதியவர் தம் இரு மகன்களுக்கிடையே (அவர்களின் துணையுடன்) அவர்கள் மீது சாய்ந்து நடந்து செல்வதைக் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவருக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அதற்கு அவருடைய இரு மகன்களும், “அல்லாஹ்வின் தூதரே! இவர் மீது (நடந்து செல்வதாக) ஒரு நேர்ச்சை உள்ளது” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “முதியவரே! வாகனத்தில் ஏறிச் செல்லும்; ஏனெனில், அல்லாஹ் உமக்கும் உமது நேர்ச்சைக்கும் தேவையற்றவன்” என்று கூறினார்கள்.