இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2088சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا هَمَّامٌ، ح وَحَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، - الْمَعْنَى - عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ أَيُّمَا امْرَأَةٍ زَوَّجَهَا وَلِيَّانِ فَهِيَ لِلأَوَّلِ مِنْهُمَا وَأَيُّمَا رَجُلٍ بَاعَ بَيْعًا مِنْ رَجُلَيْنِ فَهُوَ لِلأَوَّلِ مِنْهُمَا ‏ ‏ ‏.‏
ஸமுரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எந்தப் பெண்ணை இரண்டு பொறுப்பாளர்கள் (வெவ்வேறாக இரண்டு ஆண்களுக்குத்) திருமணம் செய்து வைக்கிறார்களோ, அவள் அவர்களில் (அந்தக் கணவர்களில்) முதலானவருக்கே உரியவள் ஆவாள். மேலும், எந்த ஒரு மனிதன் ஒரு பொருளை இரண்டு நபர்களுக்கு விற்றுவிடுகிறானோ, அப்பொருள் அவர்களில் (வாங்கியவர்களில்) முதலானவருக்கே உரியதாகும்."
ஹதீஸ் தரம் : ளயீஃப் (அல்-அல்பானீ)
ضعيف (الألباني)