தமீம் அத்-தாரீ (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:
"அல்லாஹ்வின் தூதரே! முஸ்லிம்களில் ஒருவரின் கரங்களில் (அவர் மூலமாக) இஸ்லாத்தை ஏற்கும் ஒரு மனிதரைப் பற்றிய சுன்னா என்ன?" என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வாழ்விலும் மரணத்திலும் மக்களில் அவரே அவருக்கு மிகவும் உரிமையானவர்" என்று கூறினார்கள்.