அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை 'தாத்துஸ் ஸலாஸில்' படைப்பிரிவின் தளபதியாக அனுப்பினார்கள். (அப்படைப்பிரிவிலிருந்து திரும்பி வந்ததும்) நான் அவர்களிடம் வந்து, 'மக்களில் தங்களுக்கு மிகவும் விருப்பமானவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷா' என்றார்கள். 'ஆண்களில் யார்?' என்று நான் கேட்டேன். 'அவருடைய தந்தை (அபூபக்கர்)' என்று பதிலளித்தார்கள். 'பிறகு யார்?' என்று நான் கேட்டேன். 'உமர்' என்று பதிலளித்தார்கள். பிறகு அவர்கள் பல ஆண்களை(ப் பெயர்களை)க் குறிப்பிட்டார்கள். (அப்பட்டியலில்) அவர்களில் என்னை இறுதியாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் நான் மௌனமாகிவிட்டேன்.
அம்ர் இப்னு அல்-ஆஸ் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘தாத் அஸ்-ஸலாஸில்’ படைக்கு (தளபதியாக) என்னை அனுப்பினார்கள். நான் அவர்களிடம் வந்து, “மக்களில் தங்களுக்கு மிகவும் பிரியமானவர்கள் யார்?” என்று கேட்டேன். அவர்கள், “ஆயிஷா” என்று கூறினார்கள்.
“ஆண்களில் யார்?” என்று நான் கேட்டேன். அவர்கள், “அவருடைய தந்தை (அபூபக்கர்)” என்று கூறினார்கள்.
“பிறகு யார்?” என்று நான் கேட்டேன். அவர்கள், “உமர்” என்று கூறினார்கள். பிறகு வேறு சில ஆண்களைக் குறிப்பிட்டார்கள்.
அம்ரு இப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை தாத்துஸ் ஸலாஸில் படையின் தளபதியாக நியமித்தார்கள். நான் அவர்களிடம் (நபி (ஸல்) அவர்களிடம்) சென்று, ‘அல்லாஹ்வின் தூதரே! மக்களில் உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆயிஷா (ரழி) அவர்கள்’ என்று கூறினார்கள். நான், ‘ஆண்களிலிருந்து (உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்)?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அவருடைய தந்தை (அபூபக்கர் ஸித்தீக் (ரழி))’ என்று கூறினார்கள்.