حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلاَءَ لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ ". قَالَ أَبُو بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَحَدَ شِقَّىْ إِزَارِي يَسْتَرْخِي، إِلاَّ أَنْ أَتَعَاهَدَ ذَلِكَ مِنْهُ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَسْتَ مِمَّنْ يَصْنَعُهُ خُيَلاَءَ ".
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவன் பெருமையின் காரணமாகத் தன்னுடைய ஆடையை (தரையில் படும்படி) இழுத்துக்கொண்டு செல்கிறானோ அவனை மறுமை நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான்.
அதைக் கேட்டதும் அபூபக்ர் (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! நான் (அதை) கவனமாகப் பிடித்துக்கொள்ளாவிட்டால் என்னுடைய இசாரின் ஒருபக்கம் தாழ்ந்து விடுகிறது" என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், 'நீங்கள் பெருமையின் காரணமாக அவ்வாறு செய்பவர்களில் ஒருவர் அல்லர்' என்று கூறினார்கள்.
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ جَرَّ ثَوْبَهُ مِنَ الْخُيَلاَءِ لاَ يَنْظُرُ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ " . قَالَ أَبُو بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَحَدَ شِقَّىْ إِزَارِي يَسْتَرْخِي إِلاَّ أَنْ أَتَعَاهَدَ ذَلِكَ مِنْهُ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّكَ لَسْتَ مِمَّنْ يَصْنَعُ ذَلِكَ خُيَلاَءَ " .
ஸாலிம் அவர்கள், தமது தந்தை (அப்துல்லாஹ் இப்னு உமர் ரழி) வாயிலாக அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பெருமையின் காரணமாக எவர் தனது ஆடையை (தரையில்) இழுத்துச் செல்கிறாரோ (அல்லது கணுக்காலுக்குக் கீழே தொங்கவிடுகிறாரோ), மறுமை நாளில் அல்லாஹ் அவரை (கருணையுடன்) பார்க்க மாட்டான்.”
அபூபக்கர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதரே, எனது இசாரின் ஒரு பக்கம் (கணுக்காலுக்குக் கீழே) நான் அதைக் கவனிக்காவிட்டால் (தானாகவே) கீழே இறங்கிவிடுகிறது.”
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக நீங்கள் பெருமையின் காரணமாக அவ்வாறு செய்பவர்களில் ஒருவர் அல்லர்.”
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரேனும் பெருமையுடன் தனது ஆடையை (தரையில்) இழுத்துச் சென்றால், மறுமை நாளில் அல்லாஹ் அவனைப் பார்க்க மாட்டான்.
அப்போது அபூபக்கர் (ரழி) (சித்தீக்) அவர்கள் கூறினார்கள்: என் கீழாடையின் ஒரு பக்கம் (கணுக்காலுக்குக் கீழே) இறங்கிவிடுகிறது, ஆனாலும் நான் அதை (மேலே இழுத்து) சரிசெய்து கொள்கிறேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் பெருமையின் காரணமாக அவ்வாறு செய்பவர்களில் ஒருவர் அல்லர்.