حَدَّثَنِي أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ طَيَّبْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِيَدِي لِحُرْمِهِ، وَطَيَّبْتُهُ بِمِنًى قَبْلَ أَنْ يُفِيضَ.
`ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:`
நான் நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிய நாடியபோது என் கரங்களால் அவர்களுக்கு நறுமணம் பூசினேன், மேலும் (தவாஃபுல் இஃபாளா செய்வதற்காக) அவர்கள் மினாவிலிருந்து புறப்படுவதற்கு முன்பு நான் மினாவில் அவர்களுக்கும் நறுமணம் பூசினேன்.
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لإِحْرَامِهِ قَبْلَ أَنْ يُحْرِمَ وَلِحِلِّهِ قَبْلَ أَنْ يَطُوفَ بِالْبَيْتِ .
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணியும்போது அவர்களின் இஹ்ராமுக்காகவும், ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்த பின்னர், (கஅபா) ஆலயத்தை தவாஃப் செய்வதற்கு முன்பு அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுவதற்காகவும் நான் அவர்களுக்கு நறுமணம் பூசினேன்.''
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிவதற்கு முன்பு அவர்களின் இஹ்ராமுக்காகவும், அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோது அதற்காகவும் நான் அவர்களுக்கு நறுமணம் பூசினேன்.''