தம் தந்தை (ரழி) அவர்கள் வாயிலாக சலீம் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கருப்பு மூலையையும் (அதில் கருங்கல் பதிக்கப்பட்டுள்ளது), மற்றும் ஜுமுஹி கோத்திரத்தாரின் வீடுகளுக்கு நேராக அதற்கு (கருப்பு மூலைக்கு) அருகிலுள்ள (அந்தப்) பகுதியையும் தவிர, (கஅபா) இல்லத்தின் வேறு எந்த மூலைகளையும் தொடவில்லை.