முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) என்னிடம் கூறினார்கள்: "இன்று நான் உமக்கு ஒரு ஹதீஸை அறிவிக்கிறேன்; இதன் மூலம் அல்லாஹ் இன்றுக்குப் பிறகு உமக்கு நற்பயனளிப்பானாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தாரில் ஒரு சாராரை (துல்ஹஜ் மாதத்தின்) பத்து நாட்களில் உம்ராச் செய்யவைத்தார்கள் என்பதை நன்கு அறிந்துகொள்! இதை மாற்றும் விதமாக (குர்ஆனில்) எந்த வசனமும் அருளப்படவில்லை; நபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரை அதைத் தடுக்கவுமில்லை. (எனவே,) அவர்களுக்குப் பிறகு ஒவ்வொருவரும் தமக்குத் தோன்றிய கருத்தைக் கூறலாயினர்."