இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்: “நான் தூங்கிக் கொண்டிருந்தபோது, (கனவில்) என்னிடம் பால் நிறைந்த ஒரு கிண்ணம் கொண்டுவரப்பட்டது. நான் அதிலிருந்து பருகினேன். எந்த அளவிற்கென்றால், அதன் ஈரம் என் நகங்களிலிருந்து வெளியேறுவதை நான் காணும் அளவிற்கு (பருகினேன்). பிறகு என்னிடம் மீதமிருந்ததை (நான்) உமர் (ரழி) அவர்களுக்குக் கொடுத்தேன்.”
மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! (இதற்கு) தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “(அது மார்க்க) அறிவாகும்” என்று கூறினார்கள்.