ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அரஃபா தினத்தில் அல்லாஹ் தன் அடியார்களை நரகத்திலிருந்து விடுதலை செய்வதை விட அதிகமாக வேறு எந்த நாளிலும் விடுதலை செய்வதில்லை. அவன் (அல்லாஹ்) நெருங்கி வருகிறான். பின்னர், மலக்குகளிடம் அவர்களைப் பற்றிப் புகழ்ந்து, 'இவர்கள் என்ன விரும்புகிறார்கள்?' என்று கேட்கிறான்.