உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக அறிவித்தார்கள்:
உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க நாடி (துல்ஹஜ்) மாதத்தில் நுழைந்தால், அவர் தமது முடியையோ, நகங்களையோ வெட்ட வேண்டாம். சில (அறிஞர்கள்) இந்த ஹதீஸை மர்ஃபூஃ இல்லை எனக் கருதுவதாக சுஃப்யான் அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள்: ஆனால் நான் இதனை மர்ஃபூஃ (அதாவது, நபி (ஸல்) அவர்கள் வரை அறிவிப்பாளர் தொடர் சென்றடைவது) என்றே கருதுகிறேன்.