அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முதன்முதலில் விளைந்த கனி கொண்டுவரப்பட்டபோது அவர்கள் கூறினார்கள்:
யா அல்லாஹ், எங்கள் நகரத்திலும், எங்கள் கனிகளிலும், எங்கள் முத்திலும், எங்கள் ஸாஃகளிலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக; பரக்கத்தின் மீது பரக்கத்தை அருள்வாயாக. பிறகு அதை அவர்கள் அங்கிருந்த பிள்ளைகளிலேயே சிறியவருக்குக் கொடுப்பார்கள்.
அபூ ஸயீத் அல்குத்ரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வே, எங்களுடைய ஸாஃவிலும் முத்திலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக, மேலும் அதன் பரக்கத்துடன் மேலும் இரு பரக்கத்துகளையும் பொழிவாயாக (அதன் மீது பொழியப்பட்ட பரக்கத்தைப் பன்மடங்காக்குவாயாக).