இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்காக ஒரு தங்க மோதிரத்தைச் செய்திருந்தார்கள்; பிறகு அதை அவர்கள் கைவிட்டார்கள்; பின்னர் தமக்காக ஒரு வெள்ளி மோதிரத்தைச் செய்துகொண்டு, அதில் (முஹம்மது, அல்லாஹ்வின் தூதர்) எனப் பொறித்துவிட்டு, கூறினார்கள்:
என்னுடைய இந்த முத்திரை மோதிரத்தின் பொறிப்பைப் போன்று வேறு யாரும் பொறிக்க வேண்டாம். மேலும் அவர்கள் அதை அணியும்போது, அதன் கல்லைத் தமது உள்ளங்கையின் உட்புறமாக வைத்திருந்தார்கள்; இதுவே முஐகீப் (ரழி) அவர்களின் (கைகளிலிருந்து) அரிஸ் கிணற்றில் விழுந்தது.