இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2085 eஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا حَنْظَلَةُ، قَالَ سَمِعْتُ سَالِمًا، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ مَنْ جَرَّ ثَوْبَهُ مِنَ الْخُيَلاَءِ لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ يَوْمَ
الْقِيَامَةِ ‏ ‏ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:

யார் பெருமையினால் தனது ஆடையை (தரையில் படுமாறு) இழுத்துச் சென்றாரோ, அவரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2107 lஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ،
عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَىَّ وَقَدْ سَتَرْتُ نَمَطًا فِيهِ
تَصَاوِيرُ فَنَحَّاهُ فَاتَّخَذْتُ مِنْهُ وِسَادَتَيْنِ ‏.‏
ஆயிஷா (ரழி) அறிவித்தார்கள்:

நான் உருவங்கள் பொறிக்கப்பட்ட ஒரு விரிப்பினால் (எனது வாசலை) மறைத்திருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் அதை அகற்றினார்கள், நாங்கள் அதிலிருந்து தலையணைகளைச் செய்தோம்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5327சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، ح وَأَنْبَأَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ حَدَّثَنَا بِشْرٌ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ مَنْ جَرَّ ثَوْبَهُ - أَوْ قَالَ إِنَّ الَّذِي يَجُرُّ ثَوْبَهُ - مِنَ الْخُيَلاَءِ لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏ ‏.‏
அப்துல்லாஹ் (ரழி) கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: 'யார் பெருமையினால் தனது ஆடையை இழுத்துச் செல்கிறாரோ, மறுமை நாளில் அல்லாஹ் அவரைப் பார்க்க மாட்டான்.'"

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)