حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ شُعْبَةَ، عَنْ
مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَدَعَوْتُ
فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنْ هَذَا " . قُلْتُ أَنَا . قَالَ فَخَرَجَ وَهُوَ يَقُولُ " أَنَا
أَنَا " .
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, (உள்ளே வர அனுமதி கேட்பதற்காக) அவர்களை அழைத்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘யார் அது?’ என்று கேட்டார்கள். நான், ‘நான்தான்’ என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து, (‘நான்தான்’ என்று மட்டும் கூறுவதா? யார் நீ? என்று கேட்பது போல்) ‘நான்தான், நான்தான்’ என்று (அச்சொல்லை வெறுப்புடன்) கூறினார்கள்.
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ - وَاللَّفْظُ لأَبِي بَكْرٍ - قَالَ يَحْيَى
أَخْبَرَنَا وَقَالَ أَبُو بَكْرٍ، حَدَّثَنَا - وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ،
اللَّهِ قَالَ اسْتَأْذَنْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " مَنْ هَذَا " . فَقُلْتُ أَنَا . فَقَالَ
النَّبِيُّ صلى الله عليه وسلم " أَنَا أَنَا " .
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் (உட்செல்ல) அனுமதி கேட்டேன். அவர்கள், "யார் அது?" என்று கேட்டார்கள். நான், "நான்தான்" என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான்தான், நான்தான்" (என்று (அவர் யார் என்பதைத் தெளிவுபடுத்தாததால் அதிருப்தி தொனிக்கும் விதமாக) கூறினார்கள்.)