حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ - وَاللَّفْظُ لأَبِي بَكْرٍ - قَالَ يَحْيَى
أَخْبَرَنَا وَقَالَ أَبُو بَكْرٍ، حَدَّثَنَا - وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ،
اللَّهِ قَالَ اسْتَأْذَنْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " مَنْ هَذَا " . فَقُلْتُ أَنَا . فَقَالَ
النَّبِيُّ صلى الله عليه وسلم " أَنَا أَنَا " .
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் (உட்செல்ல) அனுமதி கேட்டேன். அவர்கள், "யார் அது?" என்று கேட்டார்கள். நான், "நான்தான்" என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான்தான், நான்தான்" (என்று (அவர் யார் என்பதைத் தெளிவுபடுத்தாததால் அதிருப்தி தொனிக்கும் விதமாக) கூறினார்கள்.)
அகர்ர் அபூ முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“அபூ ஹுரைரா (ரலி) மற்றும் அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) ஆகிய இருவரும், நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாகச் சாட்சியம் அளித்ததற்கு நான் சாட்சி கூறுகிறேன்:
‘எந்தவொரு கூட்டத்தாரும் (ஓரிடத்தில்) அமர்ந்து, மகத்துவமும் கண்ணியமும் மிக்க அல்லாஹ்வை நினைவு கூர்வார்களாயின், அவர்களை வானவர்கள் சூழ்ந்து கொள்ளாமலும், அவர்களை இறைக்கருணை போர்த்திக் கொள்ளாமலும், அவர்கள் மீது அமைதி இறங்காமலும், அல்லாஹ் தன்னிடத்தில் இருப்பவர்களிடத்தில் அவர்களைக் குறித்து நினைவு கூராமலும் இருப்பதில்லை.’”