அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்வார்கள்: “அல்லாஹ்வே, நிச்சயமாக நான் உன்னிடம் நேர்வழியையும், இறையச்சத்தையும், கற்பொழுக்கத்தையும் (பாவமான காரியங்களிலிருந்து விலகி தூய்மையாக இருத்தலையும்), தன்னிறைவையும் (மக்களிடம் தேவையற்றிருத்தல் மற்றும் உள்ளத்தின் செல்வத்தையும்) கேட்கிறேன்.”