அபூ மாலிக் (ரஹ்) அவர்கள் தம் தந்தையார் (ரழி) அவர்கள் வாயிலாக அறிவிக்கின்றார்கள்:
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் என் இறைவனிடம் கேட்கும்போது எவ்வாறு கூறவேண்டும்?" என்று கேட்டதை (என் தந்தை) செவியுற்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
(இதன் பொருள்: "யா அல்லாஹ்! எனக்கு மன்னிப்பளிப்பாயாக! என் மீது கருணை காட்டுவாயாக! என்னைப் பாதுகாப்பாயாக! எனக்கு வாழ்வாதாரம் வழங்குவாயாக!")
என்று கூறுமாறு சொன்னார்கள். மேலும், அவர்கள் (ஸல்) தம் பெருவிரலைத் தவிர மற்ற விரல்களை ஒன்று சேர்த்து, "நிச்சயமாக இவை உனக்காக உனது இவ்வுலக மற்றும் மறுமை (நலன்களை) ஒன்று சேர்த்துவிடும்" என்று கூறினார்கள்.