அஸ்ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து இந்த அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இது அறிவிக்கப்பட்டுள்ளது. யஸீத் அவர்களின் அறிவிப்பு, அஸ்ஸுஹ்ரீயிடமிருந்து சுஃப்யான் அறிவித்ததைப் போன்றே உள்ளது; அதில் நான்கு தன்மைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அப்துர் ரஸ்ஸாக் அவர்களின் அறிவிப்பில், "நீங்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்; உறவுகளைத் துண்டிக்காதீர்கள்; பிணங்கிக் கொள்ளாதீர்கள்" என்று இடம்பெற்றுள்ளது.