(பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால் (தொடங்குகிறேன்); அவனது திருப்பெயருடன் (இருக்கும்போது) பூமியிலோ வானத்திலோ உள்ள எதுவும் தீங்கிழைக்காது. மேலும் அவன் (யாவற்றையும்) செவியுறுபவனும் நன்கறிபவனும் ஆவான்)
என்று கூறினால், அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது.’”
மேலும், (இந்த ஹதீஸை அறிவிக்கும்) அபான் அவர்கள் ஒரு விதமான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதனால் (அவரிடம் ஹதீஸைக் கேட்ட) மனிதர் அவரையே பார்க்கலானார். அதற்கு அபான் அவர்கள் அவரிடம், “என்ன பார்க்கிறீர்? நிச்சயமாக இந்த ஹதீஸ் நான் உமக்கு அறிவித்தது போன்றே உள்ளது. ஆயினும், என் மீது அல்லாஹ்வின் விதி நிறைவேறுவதற்காக **அன்றைய தினம்** இதனை நான் சொல்லாமல் விட்டுவிட்டேன்” என்று கூறினார்கள்.