ரபீஆ பின் கஅப் அல்-அஸ்லமீ (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நான் நபி (ஸல்) அவர்களின் அறைக்கு அருகில் இரவு தங்குவது வழக்கம். அவர்கள் இரவில் எழும்போது, நீண்ட நேரம் 'சுப்ஹானல்லாஹி ரப்பில் ஆலமீன்' (அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் தூயவன்) என்று கூறுவதையும், பிறகு நீண்ட நேரம் 'சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' (அல்லாஹ் தூயவன், புகழனைத்தும் அவனுக்கே உரியது) என்று கூறுவதையும் நான் கேட்பேன்."