நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின் போது என்னிடம் கூறினார்கள்: மக்களை அமைதிப்படுத்தி கவனிக்கச் செய்யுங்கள். பின்னர் அவர்கள் (மக்களைப் பார்த்து) கூறினார்கள், "எனக்குப் பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் கழுத்துக்களை வெட்டி (ஒருவரையொருவர் கொலை செய்து) காஃபிர்களாக (நிராகரிப்பாளர்களாக) மாறிவிடாதீர்கள்."
ஜரீர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் வதாஃவின்போது எனக்குக் கட்டளையிட்டார்கள். "மக்களைக் கவனிக்கச் சொல்லுங்கள்." பிறகு அவர்கள், "எனக்குப் பிறகு, உங்களில் ஒருவரையொருவர் கழுத்துக்களை (தொண்டைகளை) வெட்டிக்கொள்வதன் மூலம் காஃபிர்களாக (நிராகரிப்பாளர்களாக) ஆகிவிடாதீர்கள்" என்று கூறினார்கள்.
ஹஜ்ஜத்துல் வதாஃவின் போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "மக்கள் அமைதியாக இருந்து (சொல்வதைக்) கவனிக்கட்டும்" என்று கூறினார்கள். பிறகு அவர்கள் (மக்களைப் பார்த்து), "எச்சரிக்கை! எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் மற்றவரின் கழுத்துகளை வெட்டுவதன் மூலம் இறைமறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள்" என்று கூறினார்கள்.
ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஹஜ்ஜத்துல் வதா (இறுதி ஹஜ்) சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களை அமைதியாக இருக்கச் செய்யுமாறு அவரிடம் கேட்டுவிட்டு, பின்னர் கூறினார்கள்:
எனக்குப் பிறகு, ஒருவருக்கொருவர் கழுத்துக்களை வெட்டிக் கொள்வதன் மூலம் நிராகரிப்பிற்குத் திரும்பி விடாதீர்கள்.