இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: வீட்டுக் கழுதைகள் மக்களின் சுமை சுமக்கும் பிராணிகளாக இருந்த காரணத்தினாலோ, அதனால் அவர்களின் சுமை சுமக்கும் பிராணிகள் (அறுக்கப்பட்டு) போய்விடுவதை (நபி (ஸல்) அவர்கள்) வெறுத்ததினாலோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் தடுத்தார்களா? அல்லது கைபர் தினத்தன்று வீட்டுக் கழுதைகளின் இறைச்சியை (முற்றிலுமாக) தடை செய்தார்களா? என்பது எனக்குத் தெரியாது.