وعن النعمان بن بشير رضي الله عنه قال: أغمي على عبد الله بن رواحة رضي الله عنه فجعلت أخته تبكي، وتقول: واجبلاه، وا كذا وا كذا: تعدد عليه فقال حين أفاق: ما قلت شيئًا ألا قيل لي :أنت كذلك؟! ((رواه البخاري)).
அன்-நுஃமான் இப்னு பஷீர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) அவர்கள் சுயநினைவை இழந்தபோது, அவர்களுடைய சகோதரி அழுது புலம்பத் தொடங்கினார்கள். "ஆ, எங்கள் மலையே! ஆ, இன்னின்ன சிறப்புக்குரியவரே!" (என்று அவருடைய நற்பண்புகளைக் கூறி) அவர் மீது (புகழாரங்களை) அடுக்கிக் கூறினார்கள். அவர் சுயநினைவு திரும்பப் பெற்றபோது, அவர் கூறினார்கள்: "நீ (என்னை புகழ்ந்து) கூறிய ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும், 'நீ அவ்வாறு இருக்கிறாயா?' என்று (மலக்குகளால்) என்னிடம் கேட்கப்பட்டது."