"எந்த ஒரு நபியும் (இம்மைக்கும் மறுமைக்கும் இடையே ஒன்றைத்) தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அளிக்கப்படாமல் மரணிப்பதில்லை" என்று நான் கேள்விப்பட்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் மரணித்த நோயின்போது, அவர்களின் குரலில் கரகரப்புத் தோன்றிய நிலையில் பின்வருமாறு ஓதுவதை நான் கேட்டேன்:
(பொருள்: "அல்லாஹ் அருள் புரிந்தவர்களான நபிமார்கள், சித்தீக்கீன்கள் (உண்மையாளர்கள்), ஷுஹதாக்கள் (உயிர் தியாகிகள்) மற்றும் ஸாலிஹீன்கள் (நல்லடியார்கள்) ஆகியோருடன் (இருப்பதே சிறந்தது); மேலும் அவர்கள் மிகச் சிறந்த தோழர்களாக இருக்கிறார்கள்" - 4:69).
(இதைக் கேட்ட) அப்போதுதான், அவர்களுக்குத் தேர்வுரிமை வழங்கப்பட்டுவிட்டது என்று நான் எண்ணினேன்.