உஸ்மான் (ரழி) அவர்கள் ஸைத் பின் ஸாபித் (ரழி), அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரழி), ஸயீத் பின் அல்ஆஸ் (ரழி) மற்றும் அப்துர்ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரழி) ஆகியோரை அழைத்தார்கள். அவர்கள் அதனை (நூல் வடிவிலான) பிரதிகளில் படியெடுத்தார்கள். உஸ்மான் (ரழி) அவர்கள் அந்த மூன்று குறைஷி நபர்களிடம், "நீங்களும் ஸைத் பின் ஸாபித் (ரழி) அவர்களும் குர்ஆனின் ஏதேனும் ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால், அதை குறைஷிகளின் மொழியிலேயே எழுதுங்கள்; ஏனெனில் குர்ஆன் அவர்களின் மொழியில்தான் அருளப்பட்டது" என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் செய்தார்கள்.