அபூசயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தொடர்ந்து) ளுஹா தொழுகையைத் தொழுவார்கள்; எந்தளவுக்கு என்றால், 'அவர்கள் அதை (இனி ஒருபோதும்) விடவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு (அத்தொடர்ச்சி இருக்கும்). மேலும், (சில காலங்களில்) அதைத் தொழாமல் விட்டுவிடுவார்கள்; எந்தளவுக்கு என்றால், 'அவர்கள் அதை (இனி) தொழவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு (அந்த இடைவெளி இருக்கும்).
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ளயீஃப் (இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது)
அபூசயீத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் தொழுகையைத் தொழுவார்கள்; 'அதை அவர்கள் கைவிடவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவிற்கு (அதை மிகவும் தொடர்ச்சியாகத் தொழுவார்கள்). மேலும் அதை விட்டுவிடுவார்கள்; 'அதை அவர்கள் தொழவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவிற்கு (அதை நீண்ட காலம் விட்டுவிடுவார்கள், அது கட்டாயமில்லை என்பதைக் காட்ட). இதை திர்மிதீ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.