حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الرَّبِيعِ بْنِ صَبِيحٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبَانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ حَجَّ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ عَلَى رَحْلٍ رَثٍّ وَقَطِيفَةٍ تُسَاوِي أَرْبَعَةَ دَرَاهِمَ أَوْ لاَ تُسَاوِي ثُمَّ قَالَ اللَّهُمَّ حِجَّةٌ لاَ رِيَاءَ فِيهَا وَلاَ سُمْعَةَ .
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஒரு பழைய சேணத்தின் மீதும், நான்கு திர்ஹம்கள் அல்லது அதற்குக்கூடப் பெறாத மதிப்புள்ள ஒரு போர்வையுடனும் ஹஜ் செய்தார்கள். பின்னர் அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹும்ம ஹிஜ்ஜ(த்)துன் லா ரியாஅ ஃபீஹா வலா ஸும்அ(த்)த"
(யா அல்லாஹ்! இது எந்தவிதமான பகட்டும் புகழும் தேடப்படாத ஹஜ்ஜாக அமையட்டும்).
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ، عَنِ الرَّبِيعِ بْنِ صَبِيحٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبَانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: حَجَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم، عَلَى رَحْلٍ رَثٍّ، وَعَلَيْهِ قَطِيفَةٌ، لا تُسَاوِي أَرْبَعَةَ دَرَاهِمَ، فَقَالَ: اللَّهُمَّ اجْعَلْهُ حَجًّا، لا رِيَاءَ فِيهِ، وَلا سُمْعَةَ.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தேய்ந்துபோன ஒரு சேணத்தின் மீதும், நான்கு திர்ஹம்களுக்கும் குறைவான மதிப்புள்ள ஒரு கம்பளி ஆடையுடனும் ஹஜ் செய்தார்கள். அப்போது அவர்கள்:
‘அல்லாஹும்மஜ்அல்ஹு ஹஜ்ஜன், லா ரியாஅ ஃபீஹி வலா சும்அஃ’
(யா அல்லாஹ்! இதை முகஸ்துதியோ, (மக்களின்) புகழும் நோக்கமோ இல்லாத ஹஜ்ஜாக ஆக்கியருள்வாயாக!) என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : பலவீனமான அறிவிப்பாளர் தொடர் (ஸுபைர் அலீ ஸயீ)