இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

24029முஸ்னது அஹ்மத்
حَدَّثَنَا مَرْحُومُ بْنُ عَبْدِ الْعَزِيزِ قَالَ حَدَّثَنِي أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ عَنْ يَزِيدَ بْنِ بَابَنُوسَ عَنْ عَائِشَةَ أَنَّ أَبَا بَكْرٍ دَخَلَ عَلَى النَّبِيِّ ﷺ بَعْدَ وَفَاتِهِ فَوَضَعَ فَمَهُ بَيْنَ عَيْنَيْهِ وَضَعَ يَدَيْهِ عَلَى صُدْغَيْهِ وَقَالَ وَانَبِيَّاهْ واخَلِيلَاهْ وَاصَفِيَّاهْ
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் வஃபாத்தான (மரணமடைந்த) பிறகு, அபூபக்ர் (ரழி) அவர்கள் நபியவர்களிடம் (அவர்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள்) நுழைந்தார்கள். (நபியவர்களின் முகத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த துணியை விலக்கி) தமது வாயை நபி (ஸல்) அவர்களின் இரு கண்களுக்கிடையே (நெற்றியில்) வைத்து (முத்தமிட்டார்கள்). தமது இரு கைகளையும் நபியவர்களின் இரு நெற்றிப்பொட்டுகளின் மீது வைத்தார்கள். பின்னர், "வா நபிய்யாஹ்! (என் நபியே!) வா கலீலாஹ்! (என் உற்ற நண்பரே!) வா ஸஃபிய்யாஹ்! (தேர்ந்தெடுக்கப்பட்டவரே!)" என்று (துயரத்துடன்) கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஹஸன் (இதன் அறிவிப்பாளர் தொடர் நல்லதாகும்)
إسناده حسن