இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

7374ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَجُلاً، سَمِعَ رَجُلاً، يَقْرَأُ ‏{‏قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ‏}‏ يُرَدِّدُهَا، فَلَمَّا أَصْبَحَ جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَذَكَرَ لَهُ ذَلِكَ، وَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ ‏ ‏‏.‏ زَادَ إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ، أَخْبَرَنِي أَخِي، قَتَادَةُ بْنُ النُّعْمَانِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: ஒருவர், மற்றொருவர் 'குல் ஹுவல்லாஹு அஹத்' என்று திரும்பத் திரும்ப ஓதுவதைக் கேட்டார். காலை நேரமானதும் அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதுபற்றித் தெரிவித்தார். (கேட்ட) அந்த மனிதர் (ஒரே ஒரு அத்தியாயத்தை மீண்டும் மீண்டும் ஓதுவதை) குறைவானதாகக் கருதியது போன்று இருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன்மீது சத்தியமாக! நிச்சயமாக அது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமாகும்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح