ஒருவர் ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், அவ்வாறே ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் சேர்த்து மணமுடிப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்.
இப்னு ஷிஹாப் கூறினார்கள்:
ஆகவே, நாங்கள் அவளுடைய (மனைவியின்) தந்தையின் தந்தையின் சகோதரியையும், அவளுடைய (மனைவியின்) தந்தையின் தாயின் சகோதரியையும் அதே நிலையில் கருதினோம்.