அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்கள் கூறிவந்தார்கள்:
"தன் சகோதரர் வாங்கிய ஒன்றின் மீது கூடுதலாக விலை கேட்பதையும், அல்லது முன்பு பெண் கேட்டவர் அந்த எண்ணத்தைக் கைவிட்டாலோ அல்லது (பெண் கேட்கும் இவருக்கு) அனுமதி வழங்கினாலோ தவிர, இன்னொருவர் பெண் கேட்டிருக்கும் ஒரு பெண்ணிடம் மற்றவர் பெண் கேட்பதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்."