இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5156ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا فَرْوَةُ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَزَوَّجَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَتَتْنِي أُمِّي فَأَدْخَلَتْنِي الدَّارَ، فَإِذَا نِسْوَةٌ مِنَ الأَنْصَارِ فِي الْبَيْتِ فَقُلْنَ عَلَى الْخَيْرِ وَالْبَرَكَةِ، وَعَلَى خَيْرِ طَائِرٍ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் என்னை மணமுடித்தபோது, என் தாயார் என்னிடம் வந்து, என்னை வீட்டிற்குள் நுழையச் செய்தார்கள். அங்கே நான் அன்ஸார் பெண்களில் சிலரைக் கண்டேன். அவர்கள், "நன்மையும், பரக்கத்தும், நற்சகுனமும் உண்டாவதாக" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح