"அரபிகளில் அல்லாஹ்வின் பாதையில் முதன்முதலில் அம்பு எய்தவன் நான்தான். நாங்கள் (நபி (ஸல்) அவர்களுடன்) போரிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது 'ஹுப்லா' மற்றும் 'ஸமுர்' மரங்களின் இலைகளைத் தவிர எங்களுக்கு உண்ண எதுவும் இருக்கவில்லை. எனவே, எங்களில் ஒருவர் ஆடு (புழுக்கை) போடுவது போன்று மலம் கழிப்பார்; அதில் (இலகிய தன்மை) எதுவும் கலந்திருக்காது. (நிலைமை இவ்வாறிருக்க,) இன்று பனூ அஸத் குலத்தார் இஸ்லாத்தைப் பற்றி என்னைக் கண்டிக்கின்றனர் (திருத்த முற்படுகின்றனர்). அப்படியாயின் நான் நஷ்டமடைந்துவிட்டேன்; என் முயற்சியும் வீணாகிவிட்டது."