இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3335சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، وَسُوَيْدُ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، حَدَّثَنِي أَبِي قَالَ، سَأَلْتُ سَهْلَ بْنَ سَعْدٍ هَلْ رَأَيْتَ النَّقِيَّ قَالَ مَا رَأَيْتُ النَّقِيَّ حَتَّى قُبِضَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ فَقُلْتُ فَهَلْ كَانَ لَهُمْ مَنَاخِلُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ مَا رَأَيْتُ مُنْخُلاً حَتَّى قُبِضَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ قُلْتُ فَكَيْفَ كُنْتُمْ تَأْكُلُونَ الشَّعِيرَ غَيْرَ مَنْخُولٍ قَالَ نَعَمْ نَنْفُخُهُ فَيَطِيرُ مِنْهُ مَا طَارَ وَمَا بَقِيَ ثَرَّيْنَاهُ ‏.‏
அபூ ஹாஸிம் அவர்கள் கூறியதாவது:

நான் ஸஹ்ல் பின் ஸஃத் (ரழி) அவர்களிடம், “நீங்கள் சலிக்கப்பட்ட தூய (மெல்லிய) மாவைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வஃபாத்தாகும் (இறப்பெய்தும்) வரை, சலிக்கப்பட்ட தூய (மெல்லிய) மாவை நான் பார்த்ததே இல்லை” என்று கூறினார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடைகள் இருந்தனவா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வஃபாத்தாகும் (இறப்பெய்தும்) வரை நான் சல்லடையைப் பார்த்ததில்லை” என்று கூறினார்கள்.

நான், “அப்படியென்றால் சலிக்கப்படாத வாற்கோதுமையை நீங்கள் எவ்வாறு சாப்பிட்டீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நாங்கள் அதில் ஊதுவோம்; அதிலிருந்து (மெல்லிய) பறக்கக்கூடியவை பறந்துவிடும்; மீதமுள்ளதை நாங்கள் (தண்ணீர் தெளித்து) பிசைந்து கொள்வோம்” என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)