حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، سَمِعَ النَّضْرَ، أَخْبَرَنَا ابْنُ عَوْنٍ، قَالَ أَخْبَرَنِي ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ غُلاَمًا أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَدَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى غُلاَمٍ لَهُ خَيَّاطٍ، فَأَتَاهُ بِقَصْعَةٍ فِيهَا طَعَامٌ وَعَلَيْهِ دُبَّاءٌ، فَجَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَتَبَّعُ الدُّبَّاءَ ـ قَالَ ـ فَلَمَّا رَأَيْتُ ذَلِكَ جَعَلْتُ أَجْمَعُهُ بَيْنَ يَدَيْهِ ـ قَالَ ـ فَأَقْبَلَ الْغُلاَمُ عَلَى عَمَلِهِ. قَالَ أَنَسٌ لاَ أَزَالُ أُحِبُّ الدُّبَّاءَ بَعْدَ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَنَعَ مَا صَنَعَ.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் ஒரு சிறுவனாக இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்து கொண்டிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தையல்காரராக இருந்த தம்முடைய பணியாளர் ஒருவரிடம் (அவரைச் சந்திக்க) சென்றார்கள். அவர் (நபி (ஸல்) அவர்களுக்கு) சுரைக்காய் (துண்டுகள்) கலந்த உணவுள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காயைத் தேடி எடுத்து (விரும்பி) சாப்பிடலானார்கள். நான் அதைப் பார்த்தபோது, (நபி (ஸல்) அவர்கள் எளிதாக எடுப்பதற்காக) அதைச் சேகரித்து அவர்களுக்கு முன்னால் வைக்கலானேன். பிறகு அந்தப் பணியாளர் தனது வேலையில் (மீண்டும்) ஈடுபட்டார்.
அனஸ் (ரழி) அவர்கள் மேலும் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்ததிலிருந்து நான் சுரைக்காயை விரும்புபவனாகவே இருக்கிறேன்."