حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَبَلَةَ، قَالَ كُنَّا بِالْمَدِينَةِ فَأَصَابَتْنَا سَنَةٌ، فَكَانَ ابْنُ الزُّبَيْرِ يَرْزُقُنَا التَّمْرَ، وَكَانَ ابْنُ عُمَرَ يَمُرُّ بِنَا فَيَقُولُ لاَ تَقْرُنُوا فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الإِقْرَانِ، إِلاَّ أَنْ يَسْتَأْذِنَ الرَّجُلُ مِنْكُمْ أَخَاهُ.
ஜபலா அவர்கள் கூறினார்கள்:
"நாங்கள் மதீனாவில் இருந்தபோது எங்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. இப்னு அஸ்-ஸுபைர் (ரழி) அவர்கள் எங்களுக்குப் பேரீச்சம்பழங்களை வழங்கி வந்தார்கள். இப்னு உமர் (ரழி) அவர்கள் எங்களைக் கடந்து செல்லும்போது, '(பேரீச்சம்பழங்களை) இரண்டிரண்டாகச் சேர்த்து உண்ணாதீர்கள்! ஏனெனில், உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் அனுமதி கேட்டாலன்றி, (அவ்வாறு) சேர்த்து உண்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்' என்று கூறுவார்கள்."
ஜபலா பின் சுஹைம் அவர்கள் கூறியதாவது:
இப்னுஸ் ஸுபைர் (ரலி) எங்களுக்குப் பேரீச்சம்பழங்களை வழங்குவார்கள். அக்காலகட்டத்தில் மக்கள் (பஞ்சம் மற்றும் உணவுப் பற்றாக்குறையால்) சிரமத்திற்குள்ளாகி இருந்தனர். நாங்கள் (அவற்றைச்) சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இப்னு உமர் (ரலி) எங்களைக் கடந்து செல்வார்கள். அப்போது அவர்கள், “இரண்டிரண்டாக (ஒரே நேரத்தில்) சேர்த்துச் சாப்பிடாதீர்கள்; ஏனெனில், ஒருவர் தம் சகோதரரிடம் அனுமதி பெற்றாலன்றி, (ஒரே நேரத்தில்) இரண்டிரண்டு (பேரீச்சம்பழங்களை) சேர்த்துச் சாப்பிடுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்” என்று கூறுவார்கள்.
ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "இந்த வார்த்தை (அதாவது, அனுமதி கோருவது தொடர்பான விதிவிலக்கு), இப்னு உமர் (ரலி) அவர்களின் கூற்றாகவே நான் கருதுகிறேன்."