இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2557ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ زِيَادٍ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏ ‏ إِذَا أَتَى أَحَدَكُمْ خَادِمُهُ بِطَعَامِهِ، فَإِنْ لَمْ يُجْلِسْهُ مَعَهُ، فَلْيُنَاوِلْهُ لُقْمَةً أَوْ لُقْمَتَيْنِ أَوْ أُكْلَةً أَوْ أُكْلَتَيْنِ، فَإِنَّهُ وَلِيَ عِلاَجَهُ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாளர் உணவைக் கொண்டு வந்தால், அவரைத் தம்முடன் அமரவைக்காவிட்டால், ஒரு கவளம் அல்லது இரு கவளங்களாவது, அல்லது ஒரு பகுதி (உணவு) அல்லது இரு பகுதிகள் (உணவு) அவருக்கு எடுத்துக் கொடுக்கட்டும்! ஏனெனில் அவரே அதைத் தயாரித்து (சமைத்து) இருக்கிறார்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3289சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ أَبِيهِ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ إِذَا جَاءَ أَحَدَكُمْ خَادِمُهُ بِطَعَامِهِ فَلْيُجْلِسْهُ فَلْيَأْكُلْ مَعَهُ فَإِنْ أَبَى فَلْيُنَاوِلْهُ مِنْهُ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவரின் பணியாளர் அவருக்காக அவரது உணவைக் கொண்டு வந்தால், அவரைத் தம்முடன் அமரச் செய்து (அவருடன்) உண்ணட்டும். அவர் (அவ்வாறு அமர்ந்து உண்ண) மறுத்தால், அதிலிருந்து அவருக்குக் கொடுக்கட்டும் (அவரது உழைப்பிற்காகவும், சமையலின் சிரமத்திற்காகவும்).
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)