இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3096சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعُودُنِي لَيْسَ بِرَاكِبِ بَغْلٍ وَلاَ بِرْذَوْنٍ ‏.‏
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள், கோவேறுக்கழுதையின் மீதோ மட்டக்குதிரையின் மீதோ சவாரி செய்யாமல், (நான் நோயுற்றிருந்தபோது) என்னை நலம் விசாரிக்க வந்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)
4223ஜாமிஉத் திர்மிதீ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ جَاءَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيْسَ بِرَاكِبِ بَغْلٍ وَلاَ بِرْذَوْنَ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கோவேறுக்கழுதையின் மீதும் சவாரி செய்யாமலும், பிர்தவ்ன் (ஒரு வகை துருக்கிய குதிரை) மீதும் சவாரி செய்யாமலும் என்னிடம் வந்தார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
337அஷ்-ஷமாயில் அல்-முஹம்மதிய்யா
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ‏:‏ جَاءَنِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَيْسَ برَاكِبِ بَغْلٍ وَلا بِرْذَوْنٍ‏.‏
ஜாபிர் (ரழி) கூறினார்கள்:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கோவேறு கழுதையின் மீதோ மட்டக்குதிரையின் மீதோ சவாரி செய்யாமல் என்னிடம் வந்தார்கள்.”

ஹதீஸ் தரம் : ஹஸன் (ஸுபைர் அலீ ஸயீ)