அபூசயீத் (ரழி) அவர்கள் (இந்த ஹதீஸில் பின்வருமாறு) கூடுதலாக அறிவிக்கிறார்கள்: கிழக்கு மற்றும் மேற்கு அடிவானத்தில் மறையும் நட்சத்திரத்தை நீங்கள் காண்பது போல (சுவர்க்கவாசிகள் தமக்கு மேலேயுள்ள அறைகளில் இருப்பவர்களைக் காண்பார்கள்).
ஸஹ்ல் பின் சஅத் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்: "நிச்சயமாக சுவர்க்கவாசிகள், நீங்கள் வானத்தில் நட்சத்திரத்தைக் காண்பது போன்று சுவர்க்கத்தின் (மிக உயர்ந்த) மேல்தள மாளிகைகளைப் பார்ப்பார்கள்."
(அபூ ஹாஸிம் அறிவிக்கிறார்:) நான் இந்த ஹதீஸை நுஃமான் இப்னு அபீ அய்யாஷ் அவர்களிடம் அறிவித்தேன்; அப்போது அவர்கள் கூறினார்கள்: நான் அபூசயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள், "நீங்கள் அடிவானத்தில் கிழக்கு அல்லது மேற்குத் திசையில் பிரகாசிக்கும் முத்து போன்ற நட்சத்திரத்தைக் காண்பது போன்று" என்று கூறுவதைக் கேட்டேன்.
ஸஹ்ல் பின் சஅத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நிச்சயமாகச் சொர்க்கவாசிகள், வானத்தில் உள்ள நட்சத்திரத்தை நீங்கள் (கீழிருந்து அண்ணாந்து) பார்ப்பதைப் போன்று, சொர்க்கத்திலுள்ள (உயர்ந்த) மேலறையை(யும் அதில் வசிப்போரையும்) பார்ப்பார்கள்."
(இதன் அறிவிப்பாளரான அபூஹாஸிம் (ரஹ்) கூறுகிறார்:) இதனை நான் நுஅமான் பின் அபீ அய்யாஷ் (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், "அபூசயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள், '(கிழக்கு அல்லது மேற்குத் தொடுவானத்தில் மறைந்து கொண்டிருக்கும்) பிரகாசமான நட்சத்திரத்தை நீங்கள் பார்ப்பதைப் போன்று' என்று (நபி -ஸல்- அவர்கள் கூறியதாக) நான் கேட்டிருக்கிறேன்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஸஹீஹ் (இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரபூர்வமானது)