அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, வளம் மிக்கவனும் உயர்ந்தவனுமாகிய அல்லாஹ் 'தாஹா' மற்றும் 'யாஸீன்' (ஆகிய அத்தியாயங்களை) ஓதினான். அந்தக் குர்ஆனை வானவர்கள் செவியுற்றபோது, 'எந்தச் சமுதாயத்தின் மீது இது இறக்கியருளப்படுகிறதோ அந்தச் சமுதாயம் பாக்கியம் பெற்றது. எவருடைய உள்ளங்கள் இதைச் சுமக்கின்றனவோ (மனனம் செய்கின்றனவோ) அவை பாக்கியம் பெற்றவை. எவருடைய நாவுகள் இதை மொழிகின்றனவோ (ஓதுகின்றனவோ) அவை பாக்கியம் பெற்றவை' என்று கூறினார்கள்." (நூல்: தாரிமீ)