அபுத்தர்தா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒவ்வொரு நாளும் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதுவதற்கு உங்களில் எவருக்கும் இயலாமற்போகுமா?" என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அதைவிடப் பலவீனமானவர்களாகவும் (அவ்வளவு பெரிய பகுதியை ஓத) இயலாதவர்களாகவும் இருக்கிறோம்" என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நிச்சயமாக அல்லாஹ் குர்ஆனை மூன்று (கருப்பொருள்) பகுதிகளாகப் பிரித்துள்ளான். ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ (எனும் ஸூரத்துல் இக்லாஸ்) என்பது அதன் பகுதிகளில் ஒரு பகுதியாகும்" என்று கூறினார்கள்.