நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்து கொண்டிருந்தபோது, அவர்கள் 'உக்பாவே! கூறுவீராக!' என்று கூறினார்கள். நான், 'அல்லாஹ்வின் தூதரே! நான் என்ன கூற வேண்டும்?' என்று கேட்டேன். அவர்கள் எனக்குப் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தார்கள். பின்னர் அவர்கள் 'உக்பாவே! கூறுவீராக!' என்று கூறினார்கள். நான், 'அல்லாஹ்வின் தூதரே! நான் என்ன கூற வேண்டும்?' என்று கேட்டேன். அப்போதும் அவர்கள் எனக்குப் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தார்கள். நான் 'யா அல்லாஹ்! (எனக்கு பதிலளிக்கும்படி) அவரை என் பக்கம் திருப்புவாயாக' என்று கூறினேன்.
அவர்கள் 'உக்பாவே! கூறுவீராக!' என்று கூறினார்கள். நான், 'அல்லாஹ்வின் தூதரே! நான் என்ன கூற வேண்டும்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'குல் அஊது பிரப்பில் ஃபலக்' என்று கூறினார்கள். எனவே நான் அதை இறுதிவரை ஓதினேன்.
பின்னர் அவர்கள் 'கூறுவீராக' என்று கூறினார்கள். நான், 'அல்லாஹ்வின் தூதரே! நான் என்ன கூற வேண்டும்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'குல் அஊது பிரப்பின் னாஸ்' என்று கூறினார்கள். எனவே நான் அதை இறுதிவரை ஓதினேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'கேட்பவர் எவரும் இவ்விரண்டைப் போன்ற ஒன்றைக் கொண்டு கேட்டதில்லை; பாதுகாப்புத் தேடுபவர் எவரும் இவ்விரண்டைப் போன்ற ஒன்றைக் கொண்டு பாதுகாப்புத் தேடியதில்லை' என்று கூறினார்கள்.