அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தபோது என்னிடம், "அனஸே! இக்குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் காலையில் கொண்டு செல்லும் வரை, இவன் எதையும் உட்கொள்ளாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். அவர்கள் இக்குழந்தைக்கு (பேரீச்சம்பழத்தை மென்று) வாயில் தடவிவிட வேண்டும்" என்று கூறினார்கள். ஆகவே, நான் காலையில் அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தோட்டத்தில் இருந்தார்கள். அவர்கள் மீது 'ஜவ்னிய்யா' எனும் மேலங்கி இருந்தது. மேலும் வெற்றியின்போது (போர்ச் செல்வங்களாகக்) தம்மிடம் கொண்டுவரப்பட்ட (ஒட்டகங்களின்) முதுகுகளின் மீது அவர்கள் அடையாளமிட்டுக் கொண்டிருந்தார்கள்.