இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5091ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، قَالَ مَرَّ رَجُلٌ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ مَا تَقُولُونَ فِي هَذَا ‏"‏‏.‏ قَالُوا حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ يُنْكَحَ، وَإِنْ شَفَعَ أَنْ يُشَفَّعَ، وَإِنْ قَالَ أَنْ يُسْتَمَعَ‏.‏ قَالَ ثُمَّ سَكَتَ فَمَرَّ رَجُلٌ مِنَ فُقَرَاءِ الْمُسْلِمِينَ فَقَالَ ‏"‏ مَا تَقُولُونَ فِي هَذَا ‏"‏‏.‏ قَالُوا حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ لاَ يُنْكَحَ وَإِنْ شَفَعَ أَنْ لاَ يُشَفَّعَ، وَإِنْ قَالَ أَنْ لاَ يُسْتَمَعَ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ هَذَا خَيْرٌ مِنْ مِلْءِ الأَرْضِ مِثْلَ هَذَا ‏"‏‏.‏
ஸஹ்ல் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இவரைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் (தோழர்கள்), "இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்படவும், இவர் பரிந்துரைத்தால் இவரின் பரிந்துரை ஏற்கப்படவும், இவர் பேசினால் (இவர் பேச்சு) செவிமடுக்கப்படவும் தகுதியானவர் (அல்லது இவையெல்லாம் இவருக்கு நடக்கும் வாய்ப்புள்ளது)" என்று கூறினர்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் மவுனமாக இருந்தார்கள். அப்போது ஏழை முஸ்லிம்களில் ஒருவர் அவ்வழியே சென்றார். நபி (ஸல்) அவர்கள், "இவரைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்படாமலிருக்கவும், இவர் பரிந்துரைத்தால் இவரின் பரிந்துரை ஏற்கப்படாமலிருக்கவும், இவர் பேசினால் (இவர் பேச்சு) செவிமடுக்கப்படாமலிருக்கவும் தகுதியானவர் (அல்லது இவையெல்லாம் இவருக்கு நடக்க வாய்ப்பில்லை)" என்று கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பூமி நிரம்பும் அளவுக்கு அவரைப் (முதல் மனிதரைப்) போன்றவர்கள் இருப்பதைவிட இவர் மேலானவர்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
4120சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ مَرَّ عَلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَجُلٌ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ مَا تَقُولُونَ فِي هَذَا الرَّجُلِ قَالُوا رَأْيَكَ فِي ‏.‏ هَذَا نَقُولُ هَذَا مِنْ أَشْرَافِ النَّاسِ هَذَا حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ يُخَطَّبَ وَإِنْ شَفَعَ أَنْ يُشَفَّعَ وَإِنْ قَالَ أَنْ يُسْمَعَ لِقَوْلِهِ ‏.‏ فَسَكَتَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ وَمَرَّ رَجُلٌ آخَرُ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ مَا تَقُولُونَ فِي هَذَا ‏"‏ ‏.‏ قَالُوا نَقُولُ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ هَذَا مِنْ فُقَرَاءِ الْمُسْلِمِينَ هَذَا حَرِيٌّ إِنْ خَطَبَ لَمْ يُنْكَحْ وَإِنْ شَفَعَ لاَ يُشَفَّعْ وَإِنْ قَالَ لاَ يُسْمَعْ لِقَوْلِهِ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ لَهَذَا خَيْرٌ مِنْ مِلْءِ الأَرْضِ مِثْلَ هَذَا ‏"‏ ‏.‏
சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

“ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'இந்த மனிதரைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அவர்கள், 'இவர் மக்களில் மிகவும் கண்ணியமானவர்களில் ஒருவர். இவர் பெண் கேட்டால் இவருக்குத் திருமணம் செய்து வைக்கப்படவும், இவர் பரிந்துரை செய்தால் இவரது பரிந்துரை ஏற்கப்படவும், இவர் பேசினால் இவரது பேச்சு செவியேற்கப்படவும் தகுதியானவர்' என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள். அப்போது மற்றொருவர் கடந்து சென்றார். நபி (ஸல்) அவர்கள், 'இவரைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அவர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர் ஏழை முஸ்லிம்களில் ஒருவர். இவர் பெண் கேட்டால் இவருக்குத் திருமணம் செய்து வைக்கப்படாமலிருக்கவும், இவர் பரிந்துரை செய்தால் ஏற்கப்படாமலிருக்கவும், இவர் பேசினால் இவரது பேச்சு செவியேற்கப்படாமலிருக்கவும் தகுதியானவர்' என்று கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், 'பூமி நிரம்ப அந்த (செல்வந்த) மனிதரைப் போன்றவர்கள் இருந்தாலும், அவர்களை விட இவர் சிறந்தவர்' என்று கூறினார்கள்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)