நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு மிம்பர் மீது ஏறினார்கள். பள்ளிவாசலின் கிப்லாவை நோக்கித் தமது இரு கைகளாலும் சைகை செய்தார்கள். பிறகு, "நான் உங்களுக்குத் தொழுகை தொழுவித்தபோது, இந்தச் சுவரின் திசையில் சொர்க்கம் மற்றும் நரகம் ஆகிய இரண்டும் சித்தரிக்கப்பட்டிருப்பதை இப்போது கண்டேன். நன்மையிலும் தீமையிலும் இன்றைய நாளைப் போன்று நான் (வேறெதையும்) கண்டதில்லை" என்று கூறினார்கள். (இதை மூன்று முறை கூறினார்கள்).