حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ ـ هُوَ الْجُعْفِيُّ ـ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، وَأَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ بُعِثْتُ أَنَا وَالسَّاعَةَ كَهَاتَيْنِ .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் அனுப்பப்பட்டேன், மறுமை நாளும் இவ்விரண்டு (விரல்களைப்) போன்று (நெருக்கமாக உள்ளன)."
حَدَّثَنِي يَحْيَى بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ بُعِثْتُ أَنَا وَالسَّاعَةَ كَهَاتَيْنِ . يَعْنِي إِصْبَعَيْنِ. تَابَعَهُ إِسْرَائِيلُ عَنْ أَبِي حَصِينٍ.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நானும் யுகமுடிவு நாளும் இந்த இரண்டு (விரல்களைப்) போல (மிகவும் நெருக்கமாக) அனுப்பப்பட்டுள்ளோம்."
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَعَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي،
حَازِمٍ عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم .
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا يَعْقُوبُ، عَنْ أَبِي حَازِمٍ، أَنَّهُ سَمِعَ
سَهْلاً، يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُشِيرُ بِإِصْبَعِهِ الَّتِي تَلِي الإِبْهَامَ وَالْوُسْطَى
وَهُوَ يَقُولُ بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ هَكَذَا .
ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரழி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது பெருவிரலை அடுத்துள்ள (சுட்டு) விரலையும் நடுவிரலையும் சுட்டிக்காட்டி, "நானும் மறுமை நாளும் இவ்வாறு (மிக நெருக்கமாக) அனுப்பப்பட்டுள்ளோம்" என்று கூறியதை நான் கேட்டேன்.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்;
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நானும் யுகமுடிவு நாளும் இவ்விரண்டைப் போன்று (அதாவது, சுட்டு விரலும் நடு விரலும் போன்று நெருக்கமாக) அனுப்பப்பட்டுள்ளோம்."
ஷுஅபா கூறினார்கள்: கத்தாதா அவர்கள் தமது அறிவிப்பில், '(இவ்விரண்டில்) ஒன்றைவிட மற்றொன்றின் சிறப்பைப் போன்று' என்று கூறுவதை நான் கேட்டேன். மேலும், அவர் (கத்தாதா) அதை அனஸ் (ரழி) அவர்களிடமிருந்து அறிவித்தார்களா அல்லது கத்தாதா அவர்களே அவ்வாறு கூறினார்களா என்று எனக்குத் தெரியாது.
وَحَدَّثَنَا أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، عَنْ مَعْبَدٍ، عَنْ أَنَسٍ، قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ . قَالَ وَضَمَّ السَّبَّابَةَ
وَالْوُسْطَى .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நானும் மறுமை நாளும் இந்த இரண்டைப் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பட்டுள்ளோம். (அவ்வாறு கூறியபோது) அன்னார் தமது ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சேர்த்துக் காட்டினார்கள்.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நானும் யுகமுடிவு நாளும் இந்த இரண்டையும் போல (மிக நெருக்கமாக) அனுப்பப்பட்டுள்ளோம்."
– அபூதாவூத் (ஓர் அறிவிப்பாளர்) அவர்கள் தமது ஆள்காட்டி விரலாலும் நடுவிரலாலும் சுட்டிக் காட்டினார்கள். (அவ்விரண்டில்) ஒன்று மற்றொன்றை விட (மிகக் குறைந்த) வேறுபாட்டையே கொண்டிருந்தது (என்று விளக்கினார்).